< Back
மாநில செய்திகள்
16 மதுக்கடைகள் மூடல்
திருச்சி
மாநில செய்திகள்

16 மதுக்கடைகள் மூடல்

தினத்தந்தி
|
23 Jun 2023 2:39 AM IST

16 மதுக்கடைகள் மூடப்பட்டன

திருச்சி மாவட்டத்தில் மாநகரில் 12 கடைகள், புறநகரில் 4 கடைகள் உள்பட மொத்தம் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவே மீதம் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சில கடைகளில் நேற்று காலை மதுபாட்டில்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை தென்றல் நகர் (கடை எண்:10202), பாபு ரோடு (கடை எண்:10219), பெரிய கடைவீதி (கடை எண்:10249), கரூர் புறவழிச்சாலை பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் (கடை எண்:10253), கல்கண்டார்கோட்டை தங்கேஸ்வரி நகர் வடக்கு (கடை எண்:10271), எடமலைப்பட்டிபுதூர் (கடை எண்:10314), வரகனேரி பிச்சை நகர் (கடை எண்:10513), மத்திய பஸ் நிலையம் அருகில் மெக்டொனால்டுஸ் சாலை (கடை எண்:10522), தேவதானம் (கடை எண்:10559), உறையூர் கோணக்கரை ரோடு (கடை எண்:10536), திண்டுக்கல் பிதான சாலை கருமண்டபம் (கடை எண்:10302), காந்தி மார்க்கெட் (கடை எண்:10209) பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. இதுபோல் புறநகர் பகுதிகளில், திருவெறும்பூர் நவல்பட்டு சாலை (கடை எண்:10376), மணப்பாறை செவலூர் (கடை எண்:10325), கல்லக்குடி (கடை எண்:10337), பூவாளூர் கிழக்கு (கடை எண்:10510) பகுதியில் உள்ள கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை.

பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களும், மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீதம் உள்ள கடைகளையும் படிப்படியாக அரசு குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம், மதுபிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்