< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
|11 July 2023 12:20 AM IST
காலநிலை மாற்றம் குறித்துவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
பா.ம.க.வின் பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜா என்ற காட்டு ராஜா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.