< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
|17 May 2023 12:22 AM IST
அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் ஜெயலட்சுமி உள்பட 4 பேர் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை 1-ந் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஜெயலட்சுமி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி கல்வி இயக்ககம் துப்புரவு பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலமாக நிரப்ப உத்தரவு பிறப்பித்ததை கைவிடக்கோரியும், தங்களை பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மதியம் வரை இந்த போராட்டம் நடைபெற்றது.