< Back
மாநில செய்திகள்
நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்

தினத்தந்தி
|
20 Oct 2022 5:01 PM IST

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம் வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யாவின் பண்ணை வீடு மற்றும் ஸ்டூடியோ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ளது. அண்மையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற வள்ளி எட்டியப்பன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறிய வாகனங்களை வைத்து கடற்கரை தூய்மைப்பணி நடைபெறுவதை நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டினர்.

மேலும், தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஊராட்சி மன்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தூய்மைப்பணி மேற்கொள்ள வாகனம் ஒன்றை வழங்குவதாக நடிகர் சூர்யா ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பனிடம் தெரிவித்தார். இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாரிடம் இருந்து வந்த அழைப்பின்பேரில் கானத்தூர் ரெட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு நடிகர் சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர் வித்தார். டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குப்பை அள்ளும் சுகாதாரப்பணிகளுக்கான மினி லாரியின் சாவியை நடிகர் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். மேலும், நடிகர் சூர்யா தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு வந்ததும் கானத்தூர் ரெட்டிகுப்பம் கடற்கரையில் தூய்மைப் பணியில் கலந்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். வாகனத்தை பெற்று கொண்ட ஊராட்சி மன்ற தலைவர், நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்