< Back
மாநில செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
2 July 2023 2:10 AM IST

பட்டுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார். சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும்.

டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தற்போது நிலவும் விலைவாசி உயர்வுக்கு தகுந்தவாறு தினக்கூலியை ரூ.900-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, ஆணையர் (பொறுப்பு) குமார், துப்புரவு ஆய்வாளர் நெடுமாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துப்புரவு பணியாளர்கள் பணியின் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அபாயகரமான தொழில் செய்யும் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் டெண்டர் அமைப்பை ரத்து செய்து நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக தூய்மை பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்று கூறினர். இதன்பின் துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனா்.

மேலும் செய்திகள்