< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கயத்தாறு கோவிலில் துப்புரவு பணி
|6 Oct 2023 12:15 AM IST
கயத்தாறு கோவிலில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
கயத்தாறில் திருநீலகண்ட ஈஸ்வர் கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் கோவிலை சுற்றிலும் துப்புரவு பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பழகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் ராஜதுரை, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன், கவுன்சிலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.