< Back
மாநில செய்திகள்
கல்லூரியில் தூய்மை பணி
அரியலூர்
மாநில செய்திகள்

கல்லூரியில் தூய்மை பணி

தினத்தந்தி
|
31 Aug 2022 12:29 AM IST

கல்லூரியில் தூய்மை பணி நடந்தது.

தாமரைக்குளம்:

அரியலூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் கீழ் தூய்மை பணி தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளை தூய்மையாக பராமரிப்பதுபோல், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். வருகிற தலைமுறையை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

மேலும் செய்திகள்