< Back
மாநில செய்திகள்
ரெயில் நிலையத்தில் தூய்மை பணி
தென்காசி
மாநில செய்திகள்

ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளின் உதவியுடன் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் லெட்சுமி சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகி அரிமா அருணாச்சலம், முன்னாள் செயலாளர் ரஜினி, முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி தாளாளர் எழில்வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

வட்டார தலைவர் இளங்கோ கண் தான விழிப்புணர்வு உரையாற்றி கண் தான சுற்றறிக்கை வழங்கினார். கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைச் செயலாளர் தங்கராஜ் தொகுப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் தலைவர் கவுதமன், முன்னாள் செயலாளர் ஆனந்த், ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்