< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூய்மை பணி
|20 March 2023 12:15 AM IST
ஏரல் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி நடந்தது.
ஏரல்:
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடந்தது.
இதில் ஏரல், சாயர்புரம் மற்றும் நாசரேத் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து ஒட்டுமொத்த தூய்மை பணியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை மேற்பார்வையாளர் அடைக்கலம், பேரூராட்சி பணியாளர்கள் அழகுமுத்து, ஜான்சன், அற்புதராஜ், சங்கரபாபு மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் உட்பட பலர் பங்கேற்றனர்.