< Back
மாநில செய்திகள்
தூய்மை பணி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தூய்மை பணி

தினத்தந்தி
|
24 July 2022 1:28 AM IST

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்தில் தூய்மை பணி நடந்தது.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து 11-வது வார்டு தெற்கு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கூனிகுளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நேற்று நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவர் பார்வதிமோகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்