< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
துப்புரவு பணி
|3 Oct 2023 1:58 AM IST
திருவையாறு அருகே திங்களூரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் துப்புரவு பணி நடந்தது.
திருவையாறு அருகே திங்களுர் கைலாசநாத சாமி கோவில் வளாகத்தில் தூய்மையே சேவை துப்புரவு பணியை திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தொடங்கி வைத்தார். இதில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தூய்மை பணி நிகழ்ச்சியில் திருவையாறு ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் சித்ரா, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, உதவிபொறியாளர் விஜயகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னோடி மேலாளர் பிரதீப் கண்ணன், நடுக்கடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கற்பகவிநாயகம், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனில்குமார், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.