திருநெல்வேலி
தூய்மை பணி
|கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பேரூராட்சிகளில் தூய்மை பணி நடைபெற்றது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது. ரெயில் நிலையம் பகுதிகளில் துணைத் தலைவர் க.இசக்கிபாண்டியன் தலைமையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலும், புதிய பஸ்நிலையம் பகுதிகளில் டாக்டர் குமார் தலைமையிலும், பேருராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், தன்னார்வலர்கள் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
வீரவநல்லூர் பஸ்நிலையத்தில் நடந்த தூய்மை பணியில் பேரூராட்சி தலைவர் சித்ரா, கவுன்சிலர்கள் சிதம்பரம், முத்துக்குமார், தெய்வநாயகம், சுகாதார ஆய்வாளர் பிரபாகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுடலைமணி, முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டு பஸ் நிலைய சுற்றுப்புற பகுதிகளை தூய்மைப்படுத்தினர்.
சேரன்மாதேவி பேரூராட்சியில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள அம்மைநாத சுவாமி கோவிலில் தூய்மை பணி முகாம் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், செயல் அலுவலர் காதர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.