< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
துப்புரவு- பிளாஸ்டிக் ஒழிப்பு பணி
|13 Aug 2023 12:15 AM IST
துப்புரவு- பிளாஸ்டிக் ஒழிப்பு பணி
திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்"என்னுடைய தாய் மண்-எனது தேசம்" திட்டத்தின் ஒட்டுமொத்த துப்புரவு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கலைவாணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதா சக்திவேல், ஊராட்சி செயலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.