< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னையில் மயானத்தை தூய்மை செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
|27 Aug 2023 12:25 PM IST
சென்னையில் மயானங்களை தூய்மை படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் உள்ள அனைத்து மயானங்களும் தூய்மை படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.அதன்படி தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
திருவல்லிக்கேணி கிருஷ்ணபேட்டை பகுதியில் உள்ள மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அவர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வேலை செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ,சென்னையில் உள்ள மயானங்களை தூய்மை செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.படிப்படியாக அனைத்து மயானங்களும் சுத்தம் செய்யப்படும். அதன்படி இன்று திருவல்லிகேணியில், கிருஷ்ண பேட்டை , மஞ்சம்பாக்கம் ,பெருங்குடி ஆகிய பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது,என்றார்.