< Back
மாநில செய்திகள்
தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை
மாநில செய்திகள்

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடையே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு பேரணியும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மாஸ் கிளீனிங் நிகழ்வும் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து விழிப்புணர்வு பேரணி நகரசபை தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

பேரணியை கலெக்டர்ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் நகரசபை ஆணையாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், ராம்தாஸ், வீனஸ்ராமநாதன், சி.எல்.சரவணன், வீரகாளை மதியழகன், துப்புரவு ஆய்வாளர் தினேஷ், துப்புரவு அலுவலர் சுந்தரராஜன், சண்முகராஜன், ஜவஹர், முத்துகண்ணன், பகீரதநாச்சியப்பன், பரமசிவம், அனந்தராமன் மற்றும் நகரசபை பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கடைகளில் முதல்-அமைச்சரின் மஞ்சப் பை குறித்த ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முன்னதாக விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்தனர்.

விழா தொடங்கும் ராமச்சந்திரனார் பூங்காவிற்கு வந்த கலெக்டர் ஆஷா அஜீத் அருகிலிருந்த அரசு மகப்பேறு மருத்துவமனைக்குள் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கிருந்த செவிலியர்களிடம் சிகிச்சை முறை, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்