< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
வகுப்பறைகளை சீரமைக்க வேண்டும்
|8 Oct 2023 2:15 AM IST
தூதூர்மட்டம் அரசு பள்ளியில் வகுப்பறைகளை சீரமைக்க வேண்டும் என்று மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்னூர் அருகே தூதூர்மட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் சுமதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் அருண்ராஜூக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் கழகத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.