< Back
மாநில செய்திகள்
8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
மாநில செய்திகள்

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
16 Sept 2024 8:32 AM IST

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஓரசோலை ஓடப்பார்வை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த 2022- ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தி மற்றும் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

அப்போது அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், ஆசிரியர் ரஞ்சித் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்