< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம்
|30 July 2023 2:37 PM IST
வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம் அடைந்தார்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 8 வயது மாணவி, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை, வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி மாணவியை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவியின் கைகள் மற்றும் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.