< Back
மாநில செய்திகள்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது

கோப்புப்படம்

மாநில செய்திகள்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது

தினத்தந்தி
|
23 May 2022 4:46 AM IST

11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன.

மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்