< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு தமிழ் தேர்வு; சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு
|12 March 2024 10:00 PM IST
சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்தே விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விலக்கு நடப்பு ஆண்டு தேர்வுக்கு மட்டும் பொருந்தும். தமிழ் தேர்வுக்கு பதிலாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதி கொள்ளலாம்."
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.