< Back
மாநில செய்திகள்
வேன் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலி
சிவகங்கை
மாநில செய்திகள்

வேன் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலி

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

வேன் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

சிவகங்கை தென்றல் நகரை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி வைரமாணிக்கம். இவர்களுடைய மகன் மணிமாறன்(வயது 15). அமிர்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். மணிமாறன் தன்னுடைய தாத்தா ராமலிங்கம் வீட்டில் தங்கி சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து மணிமாறன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சிவகங்கையில் உள்ள சுற்றுவட்ட சாலையை மணிமாறன் கடக்க முயன்றார் அப்போது சிவகங்கையில் இருந்து அரசனூர் நோக்கி சென்ற தனியார் நிறுவன வேன் எதிர்பாராதவிதமாக மணிமாறன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்