< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவன்; 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவன்; 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
23 Jun 2024 11:13 AM IST

கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவனை தேடும் பணியானது 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி,

திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சாம் ரோஷன். இவர் நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் புதிய தடுப்பணை பகுதியில் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ரோஷன் மாயமானார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்ற தேடுதல் பணியானது போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. டிரோன் கேமரா உதவியுடன், ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்