< Back
மாநில செய்திகள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு -  17,633 பேர் ஆப்சென்ட்
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 17,633 பேர் ஆப்சென்ட்

தினத்தந்தி
|
26 March 2024 5:58 PM IST

இன்று முதல் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. . முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடந்தது . தமிழகத்தில் , 4 ஆயிரத்து 107 மையங்களில் தேர்வு நடைபெற்றது .

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.9.26 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவுசெய்திருந்த நிலையில் 17,633 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்