< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு
|21 March 2023 3:29 PM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் தொடர்பான சுற்றறிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
சென்னை,
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்து, பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.