< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தடியடி- இருக்கைகளை வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு
|8 July 2022 6:51 PM IST
ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது
ராமநாதபுரம்,
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் அதிமுக நகர கழகம் சார்பில் ஒற்றை தலைமை குறித்து தனியார் மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்த்தில் திடீரென ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் அங்கிருந்த இருக்கைகளை கொண்டு அடித்து ,ஒலிபெருக்கியை மேல் வீசி அடிதடியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதில் முக்கிய நிர்வாகிகள் உட்பட்ட 3 பேர் காயமடைந்தனர் .
BREAKING:|| அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அடிதடி#eps | #ops | #aiadmk | #admk https://t.co/OcOCP6gwKL
— Thanthi TV (@ThanthiTV) July 8, 2022