< Back
தமிழக செய்திகள்

சேலம்
தமிழக செய்திகள்
நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்

19 Sept 2023 1:36 AM IST
நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் நடந்தது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெங்கவல்லி:-
கெங்கவல்லி அருகே தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 45). இவரது விவசாய தோட்டத்து அருகில் உள்ள கருப்பையா (50) என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே சின்னப்பிள்ளையின் மகன் வினோத் பிரகாசுக்கும், கருப்பையாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. காயம் அடைந்த வினோத் பிரகாஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் ெகங்கவல்லி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.