< Back
மாநில செய்திகள்
சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது மோதல் - கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
மாநில செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது மோதல் - கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
20 July 2022 4:05 PM IST

சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் பிரதீப்(வயது20). இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டுபடித்து வருகின்றார்.

இந்நிலையில் மாணவன் பிரதீப் இன்று வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டடுள்ளது. அதில் வாக்குவாதம் முற்றியதில் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது கல்லூரி மாணவன் பிரதீப் தப்பியோடிய போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்