< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல்
|7 April 2023 4:43 PM IST
திருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல் காரணமாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் வசிப்பவர் கார்த்தி. இவரது மனைவி சௌமியா (வயது 22). இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முனுசாமி மனைவி சாமந்தி (வயது 51) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள பிரச்சினைக்குரிய இடத்தில் சாமந்தி இரும்பு வேலிகம்பி நட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சௌமியா குடும்பத்திற்கும் சாமந்தி குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முனுசாமி, சாமந்தி, கஜா, சூர்யா, குமாரி, சௌமியா, வாசகி ஆகிய 7 பேர் மீதும் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.