< Back
மாநில செய்திகள்
ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை
மாநில செய்திகள்

ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
17 Aug 2022 10:26 AM IST

ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரிக்கு மாணவர்கள் தினந்தோறும் மின்சார ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த மாணவர்களிடையே ரூட் தல விவகாரத்தில் ரெயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவமும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வரும் தக்கோலம் ராஜபேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்ற மாணவனை வழிமறித்து வேறு கல்லூரி மாணவர்கள் தலையில் அரிவாளால் வெட்டினார்கள்.

மேலும் அவருடன் வந்த அவரது சக கல்லூரி மாணவர்களையும் வேறு கல்லூரியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கற்களை கொண்டு தாக்கி விட்டு ரெயிலில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்