< Back
மாநில செய்திகள்
கோவை தனியார் கல்லூரி கலை நிகழ்ச்சியில் மாணவர்களிடையே மோதல் - ஒருவர் படுகாயம்
மாநில செய்திகள்

கோவை தனியார் கல்லூரி கலை நிகழ்ச்சியில் மாணவர்களிடையே மோதல் - ஒருவர் படுகாயம்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:52 AM IST

படுகாயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை,

கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நேற்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் அனஸ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் சக மாணவர்கள் குவிந்த நிலையில், போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்