ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் - இருவர் கைது
|அரியலூர் மாவட்டத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் ரூ.11 லட்சம் வரையிலான பணத்தை சிவா கொடுத்த நிலையில், கொல்கத்தாவில் ரெயில் நிலையத்தின் குடிநீர் குழாய் சரிபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முதலில் கவனிக்க கூறி அதற்கான பயிற்சியையும் சிவாவிற்கு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மிகவும் குறைவான சம்பளம் கொடுத்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவா போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவாஜி ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் டெல்லியை சேர்ந்த மனிஷ் பாண்டே என்பவரின் கீழ் இது போன்ற கும்பல் செயல்படுவதை அறிந்த போலீசார், அவரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.