< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்
|21 March 2023 12:15 AM IST
கடையத்தில் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கடையம்:
கடையம் மெயின் ரோட்டில் சாலை ஓரத்தில் நின்ற 2 மோட்டார் சைக்கிள்களை கனரக லாரி ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் சேதமானது.
இதனைக் கண்டதும் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், வியாபாரிகள் கனரக லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த கடையம் போலீசார், லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.