< Back
மாநில செய்திகள்
டிப்பர் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

டிப்பர் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
2 March 2023 12:00 AM IST

ஆண்டிமடம் அருகே டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருக்களத்தூர் நடுத்தெருவில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்றதாக கூறி அப்பகுதி மக்கள் 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர்களான ஆண்டிமடம் ஐயூர் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி மோகூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (22), மேலணிக்குடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்