கடலூர்
சிவில் சர்வீசஸ் தேர்வில்கடலூரை சோ்ந்த 2 போ் சாதனை
|சிவில் சர்வீசஸ் தேர்வில் கடலூரை சோ்ந்த 2 போ் சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.ஐ., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 1,011 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடந்தது. 3 கட்டங்களாக நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவு கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்த ராமநாதன் மகள் சுஷ்மிதா ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 529-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஓட்டல் வைத்து நடத்தி வரும் ராமநாதனின், மூத்த மகள் ஐஸ்வர்யாவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தற்போது கலெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரே குடும்பத்தில் அக்காள்-தங்கை இருவரும் கலெக்டர் ஆனதை அறிந்த அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே ராஜேந்திரசோழகன் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகள் மோகன பிரியாவும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 577 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். டாக்டரான மோகனபிரியா, வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.