தர்மபுரி
ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
|பாலக்கோடு அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோடு:-
பாலக்கோடு அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
பாலக்கோடு அருகே வெளாங்காடு கிராமத்தில் இருந்து கெண்டேனஅள்ளி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் ெசய்யப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது அதிகாரிகள் அளவீடு செய்த போது, அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதைதொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் சென்றனர். அப்போது சிலர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து செல்ல முடியாத வகையில் பொதுமக்கள் மண் சாலையில் பள்ளம் தோண்டினர்.
இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் திரும்பி வந்தனர். மேலும் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் வயல்களில் இறங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.