< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
12 Feb 2023 12:01 AM IST

கரூர்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிைலயங்களை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் 13 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் தற்போது 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில், தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கரூர் மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நெல் மூட்டைகள் எத்தனை உள்ளது? நெல் முறையாக கொள்முதல் செய்ய படுகிறதா? என்று கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்