< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|29 Feb 2024 6:42 PM IST
புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்று தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளது என்று 245 சிவில் நீதிபதிகளுக்கான புரவிஷனல் பட்டியலை ரத்து செய்யக்கோரி ஷீனா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், ராஜசேகர் அமர்வு டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.