< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
வடலூர் நகரமன்ற கூட்டம்
|3 April 2023 12:15 AM IST
வடலூர் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது.
வடலூர்,
வடலூர் நகரமன்ற கூட்டம் மன்ற அலுவலக கூடத்தில் நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தார். மேலாளர் (பொறுப்பு) முத்துராமன் தீர்மானங்களை வாசித்தார். வடலூர் நகராட்சியில், தெருவிளக்கு, சாலைவசதி, கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், கவுன்சிலர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.