திண்டிவனம் நகரமன்ற கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது
|திண்டிவனம் நகரமன்ற கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது
திண்டிவனம்,
திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், திண்டிவனம் நகராட்சியில் உள்ள மின்விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற ரூ.3 கோடியே 3 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் மூலம் பணிகளை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து கூட்டத்தில் பேசினர். இதில் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பார்த்திபன், பாபு உள்ளிட்ட கவுன்சிலர்கள் நகர பகுதியில் உயர்கோபுர மின்விளக்குள் எரியாமல் உள்ளது. இதை எரிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி நகரில் உள்ள விளக்குகளை ஒப்பந்ததரர்கள் பராமரித்து வருகிறார்கள். அவர்கள் சரியாக பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், நகராட்சி பொறியாளர் அசினா, மேலாளர் சந்திரா உள்பட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.