< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு
|6 July 2023 3:23 AM IST
சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை,
சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக சென்னையில் சிறுச்சேரி - கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் ஒன்று ஆலந்தூர் அருகே காந்தி மார்கெட் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.