< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க வாயிற்கூட்டம்
|9 July 2022 12:37 AM IST
விருதுநகரில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் மாநில மாநாட்டு தீர்மான விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு. போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசப்பட்டது. பொது போக்குவரத்தை பாதுகாக்கவும், தனியார் மையத்தை முறியடிக்கவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இறுதிப்படுத்தவும், ஓய்வூதியர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்கவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சி.ஐ.டி.யு. மத்திய சங்கத்தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி போஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் வெள்ளத்துரை, வேலுச்சாமி, மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.