கன்னியாகுமரி
நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். கள ஆய்வை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட நல உதவிகளை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு முறைசாரா ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜான் சவுந்தரராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட தலைவர் சிங்காரம், தையல் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரகலா, ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ், கைத்தறி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் சித்ரா, மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சகாய பாபு, முந்திரி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.