< Back
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
29 Dec 2022 12:15 AM IST

கூலி உயர்வு வழங்க கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்பந்த முறையில் பணிக்கு ஆட்களை எடுக்கக்கூடாது, கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஊட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் ரூஸோ வாட்டர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கமலஹாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் அமுதம் ரேஷன் கடைகளை கூட்டுறவுத்துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாரை வார்க்கக்கூடாது. சுமை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். ெதாழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். ரூ.4000 ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்