< Back
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 Aug 2022 9:53 PM IST

கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிச்சமுத்து முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பதை கண்டித்தும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்