நீலகிரி
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் மணிமோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நவீன் சந்திரன், தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், செயலாளர் முருகேஷ், பொருளாளர் பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.