< Back
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2023 1:29 AM IST

நெல்லையில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பீர்முகமது முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி சங்க தலைவர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது. போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க பொதுச் செயலாளர் ஜோதி, பொருளாளர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்