< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|12 July 2023 10:42 PM IST
தூய்மை பணியில் தனியார்மயத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தபால் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியை தனியார்மயமாக்கக்கூடாது, தொழிலாளர் ஆட்குறைப்பு செய்யக்கூடாது, அரசாணைப்படி குறைந்தப்பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.