< Back
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்க பிரசார நடை பயணம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்க பிரசார நடை பயணம்

தினத்தந்தி
|
26 March 2023 11:23 PM IST

திருவாடானை பகுதியில் சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்க பிரசார நடை பயணம் மேற்கொண்டனர்.

தொண்டி,

திருவாடானை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஏப்ரல் 5-ந்தேதி நடைபெற உள்ள டெல்லி பேரணியை விளக்கியும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் சி.ஐ.டி.யு. விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபயண பிரசாரம் நடைபெற்றது. திருவாடானை தியாகிகள் பூங்கா அருகில் தொடங்கிய நடை பயண பிரசார இயக்கத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சந்தானம், விவசாய சங்க தாலுகா தலைவர் ராமநாதன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் அருள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த பிரசாரம் திருவாடானை தெற்கு தெரு, ஒரியூர் நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், பாரதிநகர், கல்லூர், சி.கே. மங்களம் ஆகிய பகுதிகளுக்கு நடைபயணமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து பிரசாரம் செய்யப்பட்டது. இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சிவாஜி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சேதுராமன், விவசாய சங்க தலைவர் நாகநாதன், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் செந்தில், விவசாய சங்க தாலுகா செயலாளர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்