< Back
மாநில செய்திகள்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா

தினத்தந்தி
|
21 Oct 2023 12:33 AM IST

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.சித்தையன் தலைமை தாங்கினார். மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்