கன்னியாகுமரி
செல்போன் கோபுர பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
|தக்கலை அருகே செல்போன் கோபுர பணியை ெபாதுமக்கள் தடுத்தி நிறுத்தினர்.
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, பாறையங்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுெதாடர்பாக பொதுமக்கள் கோதநல்லூர் ேபரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிறேமகுமாரியிடம் முறையிட்டனர். இதையடுத்து நேற்று பேரூராட்சி தலைவர் தலைைமயில் துணைத்தலைவர் டேவிட், கவுன்சிலர்கள் அம்பிகா, சுனிதா, அஜிதா மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று செல்போன் கோபுர பணியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பணியில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி தலைவர் 'இங்கு செல்போன் கோபுரம் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் என மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது' என்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வன், கொற்றிக்கோடு சப் -இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து அரசின் உரிய அனுமதி பெற்றபிறகு பணிகளை செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.